Thursday, 24 May 2007

பருத்துறை வடை



பருத்தித்துறை ஊர் இரண்டு சாப்பாட்டுச் சாமான்களுக்கு பேர்போனது. ஒண்டு பருத்துறை (பருத்தித்துறை) வடை, மற்றது ஓடக்கரை அப்பம்.

பருத்தித்துறை ஊர் ஆக்கள் வெளியூரில இருக்கிற தங்களோட இனசனத்துக்கு அன்பை காட்டவேண்டுமெண்டால் ஏதாவது நொறுக்குத்தீனிதான் அனுப்புவாங்கள். அதனாலேயோ என்னவோ தெரியாது பருத்தித்துறை ஊர் ஆக்கள் மாசக்கணக்கில வைச்சுச் சாப்பிடக்கூடிய நொறுக்குத்தீனிகள் செய்வதில கெட்டிக்காரர். பொரிவிளாங்காய், உழுத்தம்பணியாரம், பகோடா, முறுக்கு வகைகள் எண்டு எது செய்தாலும் ஒரு ஆறு மாசத்துக்காவது வைச்சுச் சாப்பிடக்கூடிய மாதிரிச் செய்வாங்க. அப்படிச் செய்வதில இன்னுமொண்டுதான் இந்தப் பருத்தித்துறை வடை.

அதில பருத்தித்துறை வடை கொஞ்சம் பிரபலமானது. முன்னரெல்லாம் எந்த ஊராக்களும் பருத்தித்துறைக்கு வந்தால் கேட்டு வாங்குவாங்கள். இப்பவெல்லாம் அதுக்கு கேள்வி கூடிவிட்டதால இலங்கைத் தமிழர் இருக்கிற இடங்களில எல்லாம் செய்யுறாங்கள். ஆனால் பெயர் மட்டும் அப்படியே நிலைச்சு விட்டது. இப்ப கூட பருத்தித்துறையில செய்ஞ்ச பருத்தித்துறை வடைக்கு எண்டு தனி மரியாதை இருக்கு. பருத்தித்துறை ஊரில இருந்து உலகம் பூரா ஏற்றுமதியாகிக்கொண்டிருக்குது.

இதோ பருத்தித்துறை வடையின்ர அடிப்படையான சமையல் குறிப்பு...

தேவையான பொருட்கள்:

உழுத்தம் பருப்பு - 1 1/2 சுண்டு
கோதுமை மா - 1/2 சுண்டு
செத்தல்மிளகாய்ப்பொடி - 2 தே.க.
பெருஞ்சீரகம் - 1 தே.க.
உப்பு - அளவாக
கறிவேப்பிலை
தே. எண்ணெய்

செய்முறை:
உழுந்தை இரண்டு மணிநேரம் ஊறவைச்சு, சுத்தம் செய்து, அதிலை 1/2 சுண்டு உழுந்தை மட்டும் பசையாய் அரைச்சு, கோதுமை மா, மிளகாய்ப்பொடி, பெருஞ்சீரகம், சின்னதா வெட்டின கறிவேப்பிலை எல்லாத்தையும் ஒண்டு சேத்து இறுக்கமாக கொஞ்சமா தண்ணி விட்டுக் குழைத்து மெல்லிசான சிறு வட்டங்களாகத் தட்டிப் பொன்னிறமாக பொரித்தெடுங்கோ.

சுவை கூட வேண்டுமெண்டால் சின்னவெங்காயத்தையும் சின்னஞ்சின்னனா வெட்டிப்போடலாம். ஆனால் அதிக காலம் வைச்சு எடுக்கேலாது.

பசையாய் அரைத்த உழுந்து (1/2 சுண்டு): கோதுமை மா (1/2 சுண்டு) விகிதத்தில் வடையின் தரம் தங்கியுள்ளது. உழுந்தின் விகிதம் கூடும் போது தரம் நன்றாக இருக்கும்.

Friday, 4 May 2007

Speedup Windows XP in Minutes!

It’s not always wise to upgrade your hardware every time you feel your computer is getting slow. Here are some easy tricks to get most out of your hardware (Originally posted in http://www.mobile-pedia.com)

1. Disable extra startup programs
Several items add up to the start up list when you install different software. Such programs are loaded when your system boots and remain in memory (RAM), they also consume processor power. Here are is what you have to do to make them go away:

Goto Start>Run
Type “msconfig”, without quotations
Hit enter key or click the OK button
A window will show up you have to click the startup tab, as shown in the figure
In the Startup tab you will see several boxes and some of them will selected (checked). All you have to do is to uncheck extra items that are of no use. If you run and antivirus program it is not recommended to uncheck it.
After making you choices press the OK button, you will be prompted to restart computer to apply changes.
After you restart you computer a dialogue will be displayed you can choose not to show this dialogue every time you restart.

2. Disable Extra Services
From the menu opened by msconfig command there is also another tab for Services. Click it and check “Hide All Microsoft Services” option. This option will display you list of third party services. Uncheck the services that are not undesirable. As usual you have to reboot to apply the changes on startup.

3. Adjust Display Settings
XP has a very cool looking user interface, but it consumes a certain amount of memory. To make it a little lightweight you have to:

Right click My Computer and select Properties
Click the Advanced tab
Go to Performance>Settings (have to click settings button in the performance section)
Uncheck all except:
Use visual styles on windows and buttons
Use drop shadows for icons labels on the desktop
Show translucent selection rectangle
Show shadows under mouse pointer
Show shadows under menus
Finally click Apply and OK

4. Remove Widgets and Background
Different third party widgets and visual styles like for Vista like look and feel make your system slow. If you remove such packages you system will perform better on CPU and memory intensive tasks. Selecting default and no wallpaper as background also gives better performance than that of heavy wallpapers.

5. Folder Browsing
When you try to browse folder Windows XP automatically searches for printer and network files. This is a performance overhead. To fix this you have to follow following steps:

Open My Computer
Click Tools>Folder Options
Select the View tab and unselect the check box for Automatically search for network folders and printers
Click Apply then OK and finally reboot to apply the change.