தோளோடு தோள் சாய்ந்து...
குழலோடு.. இசை சார்ந்து..
மனதெல்லாம்.. இன்பம் தருவாய் கண்ணா!
ஐயா ! உன் நீலம் என்ன கறுப்பா?
இல்லை கார் மேகமா..?
கறுப்பை நீலம் என்று..
கதை வைத்தாரோ.. மன்னா..
நம்ம ஊர்ப்பொன்னன் எல்லாம்..
கறுப்பாய்.. இருக்க...
பொன்னிகளெல்லாம்.....
பொன்னிறம் தேடுவதேனோ???
காலம் கடந்த .. உண்மையெல்லாம்..
காத்துக் கிடக்கும் என்றாயோ??
பார்த்துப் போகும் பாதரெல்லாம்..
பாரில் வெற்றி கொள்வதேனோ??
கண்ணன் இராதா கதைகளிலே..
மன்னன் .. என்றொரு கதை இருந்தாலும்..
கண்ணன் வண்ணன்.. இடையனன்றோ!
பாலும் தயிரும் கதையினிலே.!!
ஏழை.. தொழிலது பாட்டினிலே....
கண்ணா நீயும்.. கம்யூனீஸ்ட்டோ!!!
ஏழை எழியவர் மனம் மகிழ..
லீலைகள் செய்தாயோ...???
தொழிலாளா???
வாளா வெட்டிகள் பட்டியெங்கும்..
பால் கறந்தொழிய என் செய்வார்!!
Thank you Prem (UFC).