Wednesday, 6 July 2011

மரணத்தை நோக்கி

மரணத்தை நோக்கி
ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில் ஒவ்வொரு பயணத்தில் போகின்றனர். பயணத்தின் நோக்கமும் அது போய் சேரும் இடமும் வெவ்வேறாக இருந்தாலும், கடைசியில் எல்லோரும் மரணத்தை நோக்கியே போகிறோம் என்பதை மறுக்க முடியாது. மரணத்தை பற்றிய தெளிவும் , மரணதிற்கு பின் நடக்க போகும் நிகழ்வுகளும் பற்றி தெரிந்து இருந்தால் மனசுக்குள் ஆத்திரமும், அவசரமும் தலை தூக்க வாய்ப்புகள் குறைவே. இதனால் என்ன ஆகும். மனசு சந்தோசமா இருக்கும். மனசு சந்தோசமா இருந்தா ரொம்ப நாள் உயிர் வாழலாம். ரொம்ப நாள் வாழ்ந்து ...அப்புறம் என்ன போக வேண்டிய இடத்துக்கு போய் சேர வேண்டியது தான்.